0

திருச்செந்தூர் சுப்ரமணியர் அகவல் (மூலமும் உரையும்)

120.00

ஆசிரியர்: சிற்றம்பல நாடிகள்

விளக்க உரை: முனைவர் ர. வையாபுரி

பொழிப்புரை: திருமதி சொர்ணா சோமசுந்தரம்

பக்கங்கள்: 208

  • சந்தானக் குரவர் உமாபதி சிவம் வழிவந்த மாணவ பரம்பரையில் வந்தவர் சீர்காழி சிற்றம்பல நாடிகள். இவர் அருளிய நுால் துகளறு போதம்
  • இவரது பெயரால், திருச்செந்துார் அகவல் அல்லது திருச்செந்துார் சுப்ரமணியர் அகவல் என்ற நுால் வழங்குகிறது
  • சிற்றம்பல நாடிகள் என்ற பெயருள்ள சிவஞானியால், 17 அல்லது 18 ஆம் நுாற்றாண்டில் இந்நுால் எழுதப்பட்டிருக்கலாம் அல்லது சிற்றம்பல நாடிகளின் வழிவந்த சிவஞானியாக இருக்கலாம் என்பது, சைவப் பேரறிஞர் மு. அருணாசலத்தின் கருத்து (தமிழ் இலக்கிய வரலாறு 14 ஆம் நுா.)
  • இந்நுாலில், துகளறுபோதப் பொருள் நிலை, சைவ சித்தாந்தக் கருத்துகளே பெரும்பான்மையும் உள்ளன
  • அதேநேரம், வேதாந்த சித்தாந்த சமரசம் பேசப்பட்ட காலத்தில் இந்நுால் தோன்றியதால், அதனையும் இந்நுால் பேசுவதாக உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்
  • சைவ சித்தாந்தம், வேதாந்தம் பயிலுவோர் இந்நுாலை அவசியம் படிக்க வேண்டும்
Order on WhatsApp