சைவ பூஷண சந்திரிகை
₹140.00
ஆசிரியர்: நா. கதிரைவேற்பிள்ளை
பக்கங்கள்: 224
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
• இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சைவப் பேரறிஞர் கதிரைவேற்பிள்ளை
• மாயாவாத தும்ச கோளரி எனப் பட்டம் பெற்ற இவர், 1902 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட நுால் இது
• இதில், திருநீறு, உருத்திராக்கம், பஞ்சாட்சர ஜெபம் ஆகியவற்றைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்
• பிள்ளையவர்கள் காலத்தில், திருநீறு, உருத்திராக்கம், பஞ்சாட்சரம் ஆகியவற்றை ஒரு தரப்பினர் அவதுாறு பேசி வந்ததால் அவர்களுக்குப் பதிலளிக்கும் முகமாகவும், சைவர்களுக்கு அறிவுறுத்தும் விதமாகவும் இந்நுாலை எழுதினார்
• வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் உள்ளிட்ட வடமொழி நுால்கள், பன்னிரு திருமுறை, சித்தாந்த சாத்திரங்கள் உள்ளிட்ட தமிழ் நுால்கள் என மொத்தம் 140க்கும் மேற்பட்ட நுால்களில் இருந்து மேற்கோள்கள் காண்பித்துள்ளார்
• சைவர்கள் அவசியம் படித்து உணர வேண்டிய நுால் இது












