திராவிடப் பிரகாசிகை
₹150.00
ஆசிரியர்: யாழ்ப்பாணத்து வடகோவை சபாபதி நாவலர்
பக்கங்கள்: 232
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
• தமிழில் முதன்முறையாக இலக்கிய வரலாறாக எழுதப்பட்ட நுால் இது என்பார் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
• இந்நுாலில் தமிழின் தொன்மையை முதலில் நிறுவும் சபாபதி நாவலர், அதையடுத்து இலக்கண மரபியல், இலக்கிய மரபியல், சாத்திர மரபியல் ஆகியவற்றில், தமிழின் தொடர்ச்சியைக் காட்டுகிறார்
• இலக்கணவியலில், தமிழின் இலக்கண நுால்களை வரிசையாகக் காட்டி அவற்றின் பொருண்மையைப் பேசுகிறார்
• இலக்கியவியலில், முதலில் திருமுறையில் தொடங்கி பிரபந்த இலக்கியங்கள் வரை அனைத்தையும் அறிமுகம் செய்து வைக்கிறார். இதில்தான் திருக்குறளின் முதற்குறளுக்கு, 30 பக்கங்களுக்கு விரிவான உரை எழுதியுள்ளார்
• சாத்திரவியலில், பதினான்கு சித்தாந்த சாத்திரங்களையும், அதற்கு இசைந்த வடமொழியில் உள்ள சாத்திரங்களையும், பிற மத தத்துவ நுால்களையும் அறிமுகம் செய்து வைக்கிறார்
• ஒழிபியலில் தமிழில் நுால்களை சைவர்களும், பொதுமக்களும் எப்படி, எந்த முறையில் வாசிக்க வேண்டும் என்றும் விளக்கியுள்ளார்.
• சைவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நுால் இது
• 1899 ஆம் ஆண்டு வெளிவந்த முதல் பதிப்பையே மீண்டும் நகலாக வெளியிட்டுள்ளனர்









