‘மாக்ருதா புஷ்பமாலை’ திருப்புகழ் (மூலம்)
₹700.00
பதிப்பாசிரியர்: வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன்
பக்கங்கள்: 1316
வெளியீடு: ஸ்வாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
• இதுவரை வந்த திருப்புகழ்ப் பாடல்கள் பதிப்பில் இப்பதிப்பிற்குத் தனிச் சிறப்பு உண்டு
• கடின அட்டையுடன், ஒவ்வொரு பக்கத்திலும் கட்டமிட்டு, கட்டத்திற்குள் பெரிய எழுத்தில் திருப்புகழ் பாடல்கள் இடம் பெற்றுள்ளன
• அதை விடக் குறிப்பிடத்தக்கது, திருப்புகழ்ச் சீர்பரவுவார் வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன் இந்நுாலை வித்தியாசமான முறையில் தொகுத்ததுதான்
• கயிலை மலையில் தொடங்கி இலங்கையில் உள்ள கதிர்காமம் வரையிலும் முருகப் பெருமான் தலங்களை, வடபாரதம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, அதன்பிறகு தமிழகம் என்ற வரிசையில் திருப்புகழ் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன
• தமிழகத்தில் மயிலையில் தொடங்கி வள்ளியூர் வரையிலும், அதன் பிறகு இலங்கையில் உள்ள தலங்களும் இடம் பெறுகின்றன
• தொடர்ந்து, பொதுப் பாடல்கள் உள்ளன. அதையடுத்து, விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரம் என்ற தலத்திற்கான திருப்புகழ் இடம் பெற்றுள்ளது. இத்திருப்புகழை, 2006 ஆம் ஆண்டு, ஓலைச் சுவடியில் இருந்து கண்டுபிடித்தார் ரா. கிருஷ்ணன்
• அதையடுத்து கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, கந்தர் அனுபூதி, திருவகுப்பு, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருஎழுகூற்றிருக்கை, தொடர்ந்து பாடல் முதற்குறிப்பகராதி ஆகியவை இடம் பெற்றுள்ளன
• நுாலின் தொடக்கத்தில், அருணகிரிநாதர் வாழ்க்கை வரலாறு, அருணகிரிநாதர் மீதான துதிகள், தல அகராதி, தமிழக திருப்புகழ் தல வரைபடங்கள், திருப்புகழ் பதிப்புகள் பற்றிய சிறிய ஆராய்ச்சிக் கட்டுரை ஆகியவை இடம் பெற்றுள்ளன
• திருப்புகழ் அன்பர்கள், சைவப் பெருமக்களால் அவசியம் வாங்கிப் பயின்று பாதுகாக்க வேண்டிய பதிப்பு இது






