0

கந்தபுராணத்தில் சிவபரத்துவம் – தொகுதி 2

150.00

தொகுப்பாசிரியர்: தில்லை எஸ். கார்த்திகேய சிவம்

பக்கங்கள்: 148

வெளியீடு: கந்தபுராண ஞானஸபை

• சைவ உலகில், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், கந்தபுராணம் ஆகிய மூன்று புராணங்களும், இறைவனின் முக்கண்களாகப் போற்றப்படுபவை
• இறைவனின் நெற்றிக்கண்ணாக போற்றப்படும் கந்தபுராணத்தில், சிவபெருமானின் பரத்துவத்தை, கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகள் நுால் முழுவதுமே நிலைநாட்டியுள்ளார்
• அவ்வாறு இறைவனின் பரத்துவத்தைக் கூறும் பாடல்களைத் தொகுத்து அவற்றுக்கு உரையும் வரைந்துள்ளார் தொகுப்பாசிரியர்
• யுத்த காண்டம், தேவ காண்டம் என்ற, நான்கு, ஐந்து காண்டங்களில் உள்ள சிவபரத்துவப் பாடல்கள் இந்த இரண்டாம் தொகுதியில் இடம் பெறுகின்றன
• சைவ சமயத்தின் வினைக் கொள்கை, சிவபூசையின் மகிமை, திருவண்ணாமலை தலமகிமை போன்ற முக்கியமான கருத்துகள் இந்நுாலில் இடம் பெற்றுள்ளன
• சிவபெருமான் மும்மூர்த்திகளில் ஒருவனல்லன் என்ற, திருமுறைகளின் கருத்தை, இந்நுால் தொகுப்பு மீண்டும் உறுதி செய்கிறது
• சைவ அன்பர்கள், இந்நுாலை அவசியம் வாசித்து சிவபரத்துவத்தை உணர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை

Order on WhatsApp