கங்கா தேவியின் மதுரா விஜயம்
₹160.00
ஆசிரியர்: எஸ். கிருஷ்ணன்
பக்கங்கள்: 136
வெளியீடு: சுவாசம் பதிப்பகம்
• விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்த புக்கரின் மகன் குமார கம்பண்ணன், பொ.யு. 1378 ல் மதுரை மீது படையெடுத்து சுல்தான் அரசை அழித்தார்
• இந்த போரினை, அவரது மனைவி கங்கா தேவி, மதுரா விஜயம் என்ற பெயரில் வடமொழியில் காவியமாக எழுதினார்
• இந்நுாலை எளிய தமிழில் மொழிபெயர்த்துள்ளார் எஸ். கிருஷ்ணன்
• நுாலைப் புரிந்து கொள்வதற்காக ஆரம்பத்தில், அன்றைய தென்னிந்தியாவின் அரசியல் வரலாற்றை சுருக்கமாகக் கொடுத்துள்ளார். நுாலின் இறுதியில், கம்பண்ணரின் படையெடுப்பு, துலுக்கப் படைகளின் அட்டூழியம் தொடர்பான கல்வெட்டு ஆதாரங்களையும் சேர்த்துள்ளார்
• மதுரா விஜயத்தின் தொடக்கத்தில், கிரியாசக்தி பண்டிதரைத் துதித்து நுாலை ஆரம்பித்திருப்பார் கங்கா தேவி
• இந்த கிரியாசக்தி பண்டிதர், காளாமுக சைவ குரு. சங்கம வம்சத்தைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசர்கள், காளாமுக சைவ சமயத்தைப் பின்பற்றியவர்கள்
• அதனால், விஜயநகரப் பேரரசு, காளாமுக சைவ குருவான ஒரு வித்யாரண்ய சக்தி என்பவராலேயே தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து
• ஆனால், சிருங்கேரி வித்யாரண்யர் தான் விஜயநகரப் பேரரசை தொடங்கி வைத்தார் என்ற வழக்கமான பழைய கதையை இந்நுாலாசிரியரும் இதில் கூறியுள்ளார்
• விஜயநகரப் பேரரசின் தொடக்கம் தமிழகத்தில் எப்படி அமைந்தது என்பதை அறிந்து கொள்ள அவசியம் இந்நுாலை வாசிக்க வேண்டும்






