பராக்கிரம பாண்டியனின் கோவனுார்ச் செப்பேடு
₹100.00
ஆசிரியர்: முனைவர் க. சங்கரநாராயணன்
பக்கங்கள்: 58
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
• தென்காசிப் பாண்டியர்களில், 1543 – 1552 ஆம் ஆண்டு வரை ஆண்ட பராக்கிரம பாண்டியன் அல்லது பராக்கிரம குலசேகரன் அளித்த செப்பேடு பற்றிய நுால் இது
• கோவனேரி என்ற ஊரை, 37 பிராமணர்களுக்குப் பிரித்து அக்கிரகாரம் உருவாக்க அளித்த செய்தி இந்த செப்பேட்டில் இடம் பெற்றுள்ளது
• செப்பேட்டின் முகப்பில், பூவராகர் திருவுருவமும், பாண்டியர்களின் இலச்சினையான இணை கயல், செண்டு ஆகியவையும் இடம் பெற்றுள்ளன
• இந்த செப்பேட்டை அளித்த பராக்கிரம பாண்டியன் தான், நைடதம் முதலிய நுால்களை எழுதிய அதிவீரராம பாண்டியனின் பெரிய தந்தையாக இருக்க வேண்டும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்
• தென்காசிப் பாண்டியர்களின் வரலாற்றில் இந்தச் செப்பேடு முக்கியமான ஆவணமாக விளங்குகிறது






