0

வேதாந்த சூளாமணி

150.00

ஆசிரியர்: துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

உரையாசிரியர்: ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள்

பக்கங்கள்: 264

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• தமிழக வீரசைவம், மெய்கண்ட பரம்பரையில் வந்த சைவ சித்தாந்தம், கர்நாடகத்தில் தோன்றிய வீரசைவம், தமிழகத்தில் அப்போது நிலவிய வேதாந்தம் ஆகிய மூன்று மதங்களின் கலவை எனலாம்
• அடிப்படையில் வீரசைவரான, கற்பனைக் களஞ்சியம், துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், தமிழக வீரசைவத்தைப் புரிந்து கொள்ளும் வகையில், மேற்கண்ட மூன்று மதங்களின் தத்துவங்களுக்கும் தனித்தனி நுால்கள் இயற்றினார்
• அவற்றில், வேதாந்தத்திற்கு அவர் இயற்றியதுதான் வேதாந்த சூளாமணி
• இது விவேக சூடாமணி என்ற வடமொழி நுாலின் தமிழ் மொழிபெயர்ப்பு என சிவப்பிரகாச சுவாமிகள், சிறப்புப் பாயிரத்துள் தெரிவித்துள்ளார்
• அதற்கு, திருத்துருத்தி இந்திரபீடப் பரம்பரையில் ஞானாசிரியராக எழுந்தருளியிருந்த ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள், பொழிப்புரை எழுதியுள்ளார்
• மொத்தம் 185 செய்யுட்களால் இந்நுால் விரிவாக எழுதப்பட்டுள்ளது
• 1897 ஆம் ஆண்டு, இராமநாதபுரம் அப்போதைய மகாராஜா, முத்துவிஜய ரகுநாத சேதுபதியின் வேண்டுகோளின்படி இந்நுால் வெளியானது. அதன் நகலே, அரியநுால் பதிப்புத் திட்டத்தின் கீழ் மறுபதிப்பாகியுள்ளது

Order on WhatsApp