செப்பறைப் பதி அகிலாண்டேசுவரி பதிகம் (பதவுரையுடன்)
₹65.00
ஆசிரியர்: ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள்
பதவுரை: ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
பக்கங்கள்: 88
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• நெல்லை மாவட்டம் பொருநை நதிக்கரையில் இராஜவல்லிபுரத்தில் அகிலாண்டேசுவரி உடனுறை அக்னீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது
• அங்குள்ள அகிலாண்டேசுவரியை ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள் துதித்துப் பாடிய நுால் இது
• பன்னிருசீர் ஆசிரிய விருத்தத்தில் மொத்தம் பத்துப் பாடல்கள் கொண்டது
• பத்திலும் சைவ சித்தாந்தக் கருத்துகளை செறிவாகப் பொதிந்து அருளியுள்ளார் சுவாமிகள்
• நுாலின் பிற்பகுதியில் மாகேசுர பூசை ஆசீர்வாதம், துறைசைக் குருபூசை அட்டவணை, மெய்கண்ட சந்தானத்து ஆசாரியர்களின் பரிபூரணத் தலம், மாதம், திருநட்சத்திரம் ஆகிய தகவல்கள் அடங்கிய நிலைமண்டில ஆசிரியப்பா, அறுபத்துமூவர் திருநட்சத்திரங்களைக் கூறும் நிலைமண்டில ஆசிரியப்பா, நெல்லையப்ப நாவலர் இயற்றிய அறுபத்துமூவர் திருநட்சத்திரங்களுக்கான பாடல்கள், மாத வரிசையில் அறுபத்துமூவர் குருபூசை திருநட்சத்திரப் பட்டியல் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன




