பாலபாடம் (நான்காம் புத்தகம்)
₹40.00
ஆசிரியர்: யாழ்ப்பாணம் நல்லுார் ஆறுமுக நாவலர்
பக்கங்கள்: 298
வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை
• ஆறுமுக நாவலர், சைவ சமயப் பிரசாரத்திற்காக, பள்ளிக்கூடங்களை நடத்தத் தொடங்கினார்
• மாணவர்களுக்கான அடிப்படைப் பாடத்திட்டங்களாக, பாலபாடம் என்ற தலைப்பில், நான்கு பாகங்களை வெளியிட்டார்
• நான்காம் புத்தகம், அன்றைய காலகட்டத்தில், ஆறு, ஏழாம் வகுப்புகளுக்கு உரிய தகுதி உடையதாக இருந்தது
• இதில், மொத்தம் 40 பெரிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன
• அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொது அறிவு, தமிழ்ப் பண்பாட்டை அறிந்து கொள்ளுதல், பிறர் துன்பங் கண்டு இரங்கல் ஆகியவை இவற்றின் உள்ளடக்கம்
• நாவலர், மொத்தம் 39 கட்டுரைகள் தான் எழுதியிருந்தார். 1900ங்களில், பள்ளிக்கூடப் பாடத்திட்டத்திற்கு ஏற்ப, தமிழ்ப் புலமை என்ற 40 ஆவது கட்டுரை சேர்க்கப்பட்டது
• அதோடு, நுாலின் இறுதியில் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெற்றுள்ள அருஞ்சொற்களுக்கான விரிவான பொருள்களும், பயிற்சி வினாக்களும் இடம் பெற்றுள்ளன
• நாவலரின் பாலபாடங்கள், 1822 முதல் 1879 வரையிலான ஈழம் மற்றும் தமிழகத்தின் வாழ்க்கை, பண்பாட்டு நெறிமுறைகளை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன





