திருப்போரூர்ச் சந்நதி முறை (மூலமும் உரையும்)
₹485.00
ஆசிரியர்: திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள்
பக்கங்கள்: 440
வெளியீடு: சங்கர் பதிப்பகம்
- தமிழகத்தில் வீரசைவ நெறியிலே தலைநின்றவர்களில் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் தலையாயவர்
- மதுரையில் பிறந்து, அவிநாசியில் எழுந்தருளியிருந்த சாந்தலிங்க அடிகளாரிடம் வீரசைவ தீட்சை பெற்று ஞான நிலையை அடைந்தவர்
- திருப்போரூரில் அழிந்து கிடந்த முருகப் பெருமான் திருக்கோயிலைத் திருப்பணி செய்து மீட்டவர்
- அப்பெருமான் மீது பல சந்தர்ப்பங்களில் அவர் பாடிய பாடல்களே சந்நிதி முறை எனத் தொகுக்கப்பட்டன
- தன் கண் பார்வையை மீட்டுக் கொடுத்தது இந்நுால் என்கிறார் உரையாசிரியர்
- இல்லறத்தான் அல்லேன், ஏதுபிழை செய்தாலும், பேய்போம், நோயுற்றிராமல் போன்ற பாடல்கள் சைவப் பெருமக்கள் மத்தியில் இன்றளவும் பாராயணம் செய்யப்படுபவை
- சைவப் பெருமக்கள் தினசரி பாராயணத்திற்கு வைத்துக் கொள்ள வேண்டிய அற்புத நுால்




