முத்தி பஞ்சாக்கர மாலை / ஸ்ரீ பஞ்சாக்கர தேசிகர் மாலை – உரையுடன்
₹35.00
உரையாசிரியர்: சு. குஞ்சிதபாதம், ஆதீனப் புலவர்
பக்கங்கள்: 72
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• முத்தி பஞ்சாக்கர மாலை நுால் மொத்தம் 5 திருப்பாடல்கள் கொண்டது. அதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இது துறைசை ஆதீனத்தின் காலை வழிபாட்டில் பாடப் பெறுவது
• ‘முத்தி பஞ்சாக்கர சற்குருவே’ என ஒவ்வொரு பாடலும் நிறைவடையும்
• பாடல்கள் அனைத்தும் குருமுதல்வர் ஸ்ரீநமசிவாய மூர்த்திகளின் ஞானாசிரியத் தலைமையினை இனிது எடுத்து இயம்புவன
• பஞ்சாக்கர தேசிகர் மாலை, ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகளால் இயற்றப் பெற்றது. 10 திருப்பாடல்கள் கொண்டது. ஆதீனத்தின் இரவு வழிபாட்டில் பாடப் பெறுவது
• ஒவ்வொரு பாடலும் ‘பஞ்சாக்கர தேசிகனே’ என்று நிறைவடையும்
• சிவஞான மாபாடியம் கற்றதன் பயன், ‘திருவெண்ணெய் மெய்கண்ட தேவே பஞ்சாக்கர தேசிகனே’ என இந்தப் பஞ்சாக்கர தேசிகர் மாலையினை ஓதி, குருமுதல்வரின் திருவடி தொழுதலே ஆகும்


