0

திருக்களிற்றுப்படியார் (மூலமும் – உரையும்)

₹90.00

ஆசிரியர்: திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்

உரையாசிரியர்: தில்லைச் சிற்றம்பலவர் என்னும் சிவப்பிரகாசனார்

பக்கங்கள்: 222

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

  • மெய்கண்ட சாத்திரங்களில் மூத்தவை திருவுந்தியாரும் திருக்களிற்றுப்படியாரும்
  • திருவுந்தியாருக்கு உரையாக எழுந்தது திருக்களிற்றுப்படியார். இந்நுாலுக்குப் பலர் உரை செய்துள்ளனர்
  • அவற்றுள் திருவாவடுதுறை ஆதீனத்துத் தம்பிரான் சுவாமிகளாக இருந்த தில்லைச் சிற்றம்பலவர் என்னும் சிவப்பிரகாசர் செய்த உரையே இந்நுால்
  • இவ்வுரை மிகச் சிறந்தது என, காஞ்சிபுரம் தொண்டை மண்டலத்து 229 ஆம் பட்டம் குருமகா சந்நிதானம் (பூர்வாசிரமத்தில் முத்து. சு. மாணிக்கவாசக முதலியார்) விதந்து போற்றியுள்ளனர்
  • செய்யுளைக் கொண்டு கூட்டி விளக்குவதாகவும், ஒவ்வொரு செய்யுளுக்கும் வேறு உரை இருந்தால் அதைப் பதப் பொருளாகவும், அடுத்தடுத்த செய்யுட்களுக்கு இடையிலான இயைபை அவதாரிகையாகவும் உரைக்கிறது, இவ்வுரை
  • இந்நுாலின் முதற்பதிப்புரையில் நுாலின் அருமையை மிக விரிவாக விளக்கியுள்ளார் ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  • அதையடுத்து, திருவுந்தியாரின் பாடல்களுக்கு நேர் உரையாக அமைந்த திருக்களிற்றுப்படியார் பாடல்களின் அட்டவணை இடம்பெற்றுள்ளது
  • சித்தாந்தம் பயிலும் சைவர்கள் அனைவரும் இந்நுாலையும் அவசியம் பயில வேண்டும் என்பது சொல்லாமலே அமையும்
Order on WhatsApp