சங்கரநயினார் கோயில் தலபுராணம்
₹300.00
ஆசிரியர்கள்: சீவலமாற பாண்டியன், முத்துவீரப்பக் கவிராயர்
உரையாசிரியர்: அம்பிகைதாசன், கீழவயலிபக்கங்கள் (Pages): 236
வெளியீடு: குகபதி பதிப்பகம்
• இன்றைய தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோயில். இங்கு கோமதி அம்மை உடனுறை சங்கரநயினார் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் தான், சங்கரநாராயணர் திருவுருவும் வழிபாட்டில் இருக்கிறது
• இத்தலத்தில்தான் ஆடித்தபசு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது
• இத்தலத்திற்கு, சீவலமாற பாண்டியன் என்பவரால், ஒரு தலபுராணம் இயற்றப்பட்டது. இவர் தென்காசிப் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர்
• அது சுருக்கமாக இருந்ததால், முதலில் இடம் பெற்றுள்ள ஆறு சருக்கங்களையும் கடவுள் வாழ்த்து 3 செய்யுட்களையும், புராண வரலாற்றுள் இரு கவிகளையும் முத்துவீரப்பக் கவிராயர் பாடிச் சேர்த்தார்
• இப்புராணத்திற்கு முதன் முறையாக, அம்பிகைதாசன், அரும்பதவுரையும் உரையும் செய்து வெளியிட்டுள்ளார்
• சைவப் பெருமக்கள் அவசியம் வாசிக்க வேண்டிய தலபுராண நுால் இது






