0

கந்தர் அநுபூதி – மூலமும் உரையும்

₹200.00

உரையாசிரியர்: மா. வே. நெல்லையப்ப பிள்ளை

பக்கங்கள்: 200

வெளியீடு: கவின் பப்ளிகேஷன்ஸ்

  • அருணகிரிநாதர் அருளிச் செய்த அருள்நுால்களுள் தலையாயது கந்தர் அநுபூதி; நுாலின் பெயரே, திருவருளை உணர்த்தி நிற்கிறது
  • இந்நுாலுக்கு 20 ஆம் நுாற்றாண்டில் சைவ சித்தாந்த நல்லறிஞர் சிலர் உரை எழுதி வெளியிட்டனர்
  • அவற்றுள் துாத்துக்குடி சைவ சித்தாந்த சபையில், ஆசிரியர் என்று போற்றப்பெற்ற மா. வே. நெல்லையப்ப பிள்ளை அவர்கள் 1943 ஆம் ஆண்டு வெளியிட்ட இவ்வுரை சிறந்த உரையாகத் திகழ்கிறது
  • கிருபானந்த வாரியார் நடத்திய 'திருப்புகழமிர்தம்' பத்திரிகையில், அவரது வேண்டுகோளுக்கு இணங்க, 1940 ஆம் ஆண்டு சித்திரையில் எழுதத் தொடங்கி, 1942 ஆம் ஆண்டு சித்திரையில் முடித்தார். பின், 1943 ஆம் ஆண்டு நுாலாக வெளியிடப்பட்டது
  • அதன்பின், 1996 ஆம் ஆண்டு தான் இந்நுால் மறு அச்சு கண்டது. தற்போது கவின் பப்ளிகேஷன்ஸ் மூலம் மீள்பதிப்பு கண்டுள்ளது
  • முதற்பதிப்பின் முகவுரையில், கந்தர் அநுபூதியில் உள்ள பாடல்களுக்கான கருத்துகளை விரிவாகப் பதிவு செய்துள்ளார் உரையாசிரியர்
  • ஒவ்வொரு பாடலுக்கும் பதவுரையும் விளக்கவுரையும் இடம் பெற்றுள்ளன
  • சைவப் பெருமக்கள், அவசியம் இந்நுாலைப் பயில வேண்டும்
Order on WhatsApp