0

Seven Ethico – Didactic Works In Tamil – (தமிழ் நீதிநுால்கள் – சம்ஸ்கிருதம், ஆங்கிலம் மொழிபெயர்ப்புகளுடன் )

200.00

பதிப்பாசிரியர்: சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன் மற்றும் வித்வான் T. V. ஸ்ரீநிவாசன் M.A. | பக்கங்கள்: 198 | வெளியீடு: கலா சம்ரக்ஷண சங்கம்

Order on WhatsApp

Description

  • பதிப்பாசிரியர்: சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன் மற்றும் வித்வான் T. V. ஸ்ரீநிவாசன் M.A.
  • பக்கங்கள்: 198
  • வெளியீடு: கலா சம்ரக்ஷண சங்கம்

1870களில் தமிழகத்தில் மதப் பரப்பலுக்காக வந்த கிறித்துவ போதகர்களில் ஒருவர் ரெவரென்ட் எஸ். வின்ஃப்ரட்

இவர், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, நன்னெறி, நீதிநெறி விளக்கம் ஆகிய நீதி நுால்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1872 ஆம் ஆண்டு வெளியிட்டார்

இந்நுாலுக்கு மற்றொரு கிறித்துவ போதகரான ஜான் முர்டாக் அணிந்துரை அளித்துள்ளார்

இன்னொரு கிறித்துவ போதகரான எட்வர்ட் ஜெபிட் ராபின்சன் என்பவரும், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை ஆகிய மூன்று நுால்களை மட்டும் 1885 ஆம் ஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார்

பண்டித வியாகரண சாகித்ய சிரோமணி டி.எஸ். வைத்தியநாத சாஸ்திரி, கே. எஸ். நரசிம்ம சாஸ்திரி ஆகியோர் மேற்கண்ட நீதிநுால்களை, 1961 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளில் மொழிபெயர்த்தனர்

மேற்கண்ட ஆங்கிலம் மற்றும் சம்ஸ்கிருத மொழிபெயர்ப்புகளையும், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகியவற்றுக்கு இராமாநுச கவிராயர் மற்றும் மாகறல் கார்த்திகேய முதலியார் எழுதிய காண்டிகை உரையையும் சேர்த்து இந்நுாலை 1996 ஆம் ஆண்டு வெளியிட்டார் டி. என். ஆர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Seven Ethico – Didactic Works In Tamil – (தமிழ் நீதிநுால்கள் – சம்ஸ்கிருதம், ஆங்கிலம் மொழிபெயர்ப்புகளுடன் )”

Your email address will not be published. Required fields are marked *