வடமொழி – தென்மொழி சிவஞானபோதம் (மூலமும் – உரையும்)
₹100.00
தொகுப்பாசிரியர்: தில்லை எஸ். கார்த்திகேய சிவம்
பக்கங்கள்: 76
வெளியீடு: ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம்
• சைவ சித்தாந்தத் தத்துவத்தின் தலையாய நுாலாக சிவஞானபோதம் போற்றப்படுகிறது
• இந்நுால் ரெளரவ ஆகமத்தில், பாசவிமோசனப் படலத்தில் 12 சுலோகங்களாக இடம் பெற்றுள்ளது என்பது மரபான கருத்தாக உள்ளது
• இக்கருத்தை மையமாகக் கொண்டு, சிவஞானபோதம் தமிழ், வடமொழி மூல சூத்திரங்கள், அவற்றிற்கான உரை, வடமொழி சிவஞானபோதத்திற்கான சிவாக்கிர பாஷ்யம் பற்றிய அறிமுகம், தமிழ்ச் சிவஞானபோதத்திற்கு பாஷ்யம் அருளிய சிவஞான சுவாமிகள் வரலாறு, சிவஞானபோத பாஷ்யத்தை வெளிப்படுத்திய, சூரியனார்கோயில் இலக்கணம் ஸ்ரீமத் முத்துக்குமாரத் தம்பிரான் சுவாமிகள் வரலாறு ஆகியவை இந்நுாலில் இடம் பெற்றுள்ளன
• நுாலின் இறுதியில், சிவஞானபோதத்திற்கு வந்த உரைநுால்களின் பதிப்பு விவரம், மெய்கண்ட தேவ நாயனார் மீதான பல்வேறு துதிகள் ஆகியன தொகுக்கப்பட்டுள்ளன
• சிவஞானபோதம் பற்றிய அறிமுகம் வேண்டுவோருக்கு இந்நுால் சிறந்த வழிகாட்டி






