திருமுறைத் திருத்தலங்கள் (2 பகுதிகள்)
₹860.00
ஆசிரியர்: வேணு சீனிவாசன்
பக்கங்கள்: 760 (இரு பகுதிகளும் சேர்த்து)
வெளியீடு: சங்கர் பதிப்பகம்
- மூவர் தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற தலங்கள் மொத்தம் 276. இவற்றில் 266 தலங்கள் தமிழகத்தில் உள்ளன
- இத்திருத்தலங்கள் அனைத்தையும் தம் வாணாளுக்குள் தரிசிப்பது ஒவ்வொரு சைவனின் கடமையாகும்
- இத்திருத்தலங்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இரு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன
- முதல் பகுதியில், நுாலின் தொடக்கத்தில், திருமுறைகளின் சிறப்பு, திருமுறைகளின் வரலாறு, பன்னிரு திருமுறைகள் பற்றிய அறிமுகம், திருமுறைகளின் பகுப்பு முறை, திருமுறைகளின் சிறப்புகள், திருவங்க மாலைப் பதிகமும் விளக்கமும், திருத்தலப் பெருமைகள் ஆகிய கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளன
- தலயாத்திரை மேற்கொள்வோருக்கு இந்நுாற்கள் அவசியம் பயன்படும் என்பதில் ஐயமில்லை




