திருத்தலங்கள் வரலாறு
₹600.00
ஆசிரியர்: உ. வே. சாமிநாதையர்
பக்கங்கள்: 876
வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்
- தமிழ்த்தாத்தா உ. வே. சாமிநாதையர் எழுதி வைத்திருந்த தலக் குறிப்புகளின் அடிப்படையில் இந்நுால் முதன்முதலில் 1990ல் இரு தொகுதிகளாகப் பதிப்பிக்கப் பெற்றது
- 2024 ஆம் ஆண்டு, முதன்முறையாக இரு தொகுதிகளும் சேர்க்கப்பட்டு ஒரே தொகுதியாக, இந்நுால் வெளியாகியுள்ளது. இந்நுாலை, திருத்தலங்கள் பற்றிய கலைக்களஞ்சியம் என்றே சொல்லலாம்
- வழக்கமாக, பாடல் பெற்ற தலங்களைப் பற்றிய நுால்களில் உள்ள குறிப்புகளோடு, இதுவரை யாரும் பார்த்திராத, படித்திராத பல அரிய குறிப்புகளும் இந்நுாலில் இடம் பெற்றுள்ளன
- குறிப்பாக, திருவிடைமருதுார் தலத்திற்குரிய மத்தியார்ச்சுன மான்மியத்தை, தமிழில் மொழிபெயர்த்து வைத்திருந்தார் உ. வே. சா. அது அப்படியே இந்நுாலில் சேர்க்கப்பட்டுள்ளது. அத்தலத்திற்கு மட்டும் மொத்தம் 40 பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தனி நுாலாகவே அச்சிடும் அளவிற்கு அரிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன
- முதல் தொகுதியில் தலங்களைப் பற்றிய குறிப்புகள், தலபுராணங்களும் இடம் பெறுகின்றன
- இரண்டாவது தொகுதியில் தலங்கள் பற்றிய அரிய தகவல்கள் பல்வேறு தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன
- சைவப் பெருமக்கள் அவசியம் தங்கள் வீட்டு நுாலகத்தில் வைத்திருக்க வேண்டிய அரிய பொக்கிஷம்






