Siva Temple And Temple Rituals – சிவாலயங்களும் ஆலயக் கிரியைகளும் (தமிழ் – ஆங்கிலம்)
₹400.00
Editor: S. S. Janaki
Pages: 333
Publisher: The Kuppuswami Sastri Research Institute
- குப்புஸ்வாமி சாஸ்திரி ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக இருந்த எஸ். எஸ். ஜானகி அம்மையார், சைவ ஆகமங்கள் குறித்த ஆய்வில் நீண்டகாலம் ஈடுபட்டவர்
- வெறும் ஆய்வுகளோடு நின்று விடாமல், அவற்றுக்கான கருத்தரங்குகள் நடத்தி, சைவாகமங்கள் பற்றிய தெளிவினை ஏற்படுத்த முயன்றவர்
- 1983 ஆம் ஆண்டு, சிவாலயங்களும் ஆலயக் கிரியைகளும் என்ற தலைப்பில் அவர் நடத்திய கருத்தரங்கில் இடம்பெற்ற சொற்பொழிவுகளே இந்நுாலில் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ளன. 2015 ஆம் ஆண்டு இந்நுால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது
- இந்நுாலில் இடம்பெற்றுள்ள ஒன்பது கட்டுரைகளில் இரண்டு தமிழில் உள்ளன. சின்னமேளம் – தாசி ஆட்டம் என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழ்ச் சுருக்கம் இந்நுாலின் இறுதியில் இடம்பெற்றுள்ளது
- ஆங்கிலக் கட்டுரைகளின் தமிழ் மொழியாக்கம் அக்கட்டுரைகளை அடுத்து இடம்பெற்றுள்ளன. தமிழ்க் கட்டுரைகளின் ஆங்கில மொழியாக்கமும் அவ்வாறே
- கட்டுரைகள் தொடர்பான விளக்கப் படங்களும் இடம்பெற்றுள்ளன
- சைவ சமயம் பற்றி ஆய்வு செய்வோர், ஆலயக் கிரியைகள் பற்றி ஆய்வு செய்வோர், சிவாச்சாரியர்கள், ஸ்தபதிகள் போன்றோருக்கு இந்நுால் சிறந்த பொக்கிஷம் எனலாம்








