0

கைவல்லிய நவநீதம் (மூலமும் விருத்தியுரையும்)

200.00

ஆசிரியர்: தாண்டவராய சுவாமிகள்

விருத்தியுரை: ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள்

பக்கங்கள்: 336

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• வேதாந்தத் தத்துவப் பள்ளியில், தமிழில் அதிகளவில் இன்று வரை பயிலப்படும் ஒரே நுால் கைவல்லிய நவநீதம் மட்டுமே
• இன்றைய திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தைச் சேர்ந்தவர் இந்நுாலாசிரியர் தாண்டவராய சுவாமிகள். இவரது ஞானாசிரியர் நாராயண தேசிகர்
• சந்தேகம் தெளிதல் படலம், தத்துவ விளக்கப் படலம் என்ற இரு படலங்களுடன் 293 செய்யுட்களில் வேதாந்தத்தை விளக்கியுள்ளார் ஆசிரியர்
• இந்நுாலுக்கு ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள் எழுதிய விருத்தியுரை, கோவிலுார் மடத்து சிதம்பரம் ஸ்ரீ பொன்னம்பல தேசிகர் எழுதிய தத்துவார்த்த தீபம் என்ற உரை ஆகியவையே பழைய உரைகள்
• இந்நுால், வடமொழி, மலையாளம், தெலுங்கு, ஜெர்மன் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
• வேதாந்திகள் மட்டுமின்றி, பிறமத தத்துவங்களைப் பயில விரும்பும் சைவ அன்பர்கள், தமிழ் அன்பர்கள், தத்துவ மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நுால் இது
• இந்நுாலை 1855 ஆம் ஆண்டு, ஜெர்மானியர் சார்லஸ் கிரவுல், ஆங்கிலத்திலும் ஜெர்மனியிலும் மொழிபெயர்த்தார். இவரது ஆங்கில மொழிபெயர்ப்பு, நம் இணையதளத்திலேயே கிடைக்கிறது. https://shorturl.at/DxfHb – இதைச் சொடுக்கி விவரங்கள் பெறலாம்

Order on WhatsApp