காஞ்சிப் புராணம் (இரண்டு காண்டங்கள்) உரையுடன்
₹2,400.00
ஆசிரியர்கள்: ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள் & கவிராட்சச கச்சியப்ப முனிவர்
உரையாசிரியர்கள்: வித்துவான் பொன். சண்முகனார் & புலவர் முத்துக்குமார சுவாமிகள்
பக்கங்கள்: 1020 + 654
வெளியீடு: முருகவேள் பதிப்பகம்
- திருவாவடுதுறை ஆதீனத்துக் குலதெய்வமாகிய, திராவிட மாபாடிய கர்த்தர் ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த நுால்களுள், காஞ்சிப் புராணம் முதற்காண்டமும் ஒன்று
- முதற்காண்டத்தில், மொத்தம் 67 படலங்களில், 2742 திருவிருத்தங்கள் (செய்யுட்கள்) உள்ளன
- முதற்காண்டத்திற்கு பொன். சண்முகனார் எழுதிய உரையும், இரண்டாம் காண்டத்திற்கு புலவர் முத்துக்குமாரசுவாமி எழுதிய உரையும் தற்போது மறுபதிப்பு கண்டுள்ளன
- முதற்காண்டம் நுாலின் தொடக்கத்தில், கச்சி ஏகம்பத்து உற்சவ மூர்த்திகள், நமசிவாய மூர்த்திகள், மாதவச் சிவஞான சுவாமிகள் ஆகியோரின் திருவுருவப் படங்கள், மாதவச் சிவஞான சுவாமிகள் வரலாறு, இப்புராணம் பற்றி, திருவாவடுதுறை ஆதீனப் புலவர் சு. குஞ்சிதபாதம் எழுதிய, அரிய ஆய்வுரை ஆகியன இடம் பெற்றுள்ளன. நுாலின் இறுதியில், இந்நுாலில் இடம்பெற்றுள்ள சித்திர கவிகள் படங்களோடு இடம் பெற்றுள்ளன
- காஞ்சிப் புராணத்தின் இரண்டாம் காண்டத்தை, மாதவச் சிவஞான சுவாமிகளின் தலை மாணாக்கரான கவிராட்சச கச்சியப்ப முனிவர் பாடி அருளியுள்ளார்
- இரண்டாம் காண்டத்தில் மொத்தம் 7 படலங்கள், 2113 செய்யுட்கள் அமைந்துள்ளன
- இரண்டாம் காண்டம் நுாலின் முதலில், கச்சியப்ப முனிவரின் அழகிய படம், கச்சியப்ப முனிவர் வரலாறு ஆகியன இடம் பெற்றுள்ளன
- சைவ சித்தாந்த நுண்பொருள்கள், தமிழ் இனிமை அமைந்த அரிய நுால் இது
- சைவப் பெருமக்கள், தமிழ் அன்பர்கள் அவசியம் வாசித்துப் பயில வேண்டிய நுால்








