0

கச்சியப்ப முனிவரின் சைவ சித்தாந்தம் (மூன்று பாகங்கள்)

1,100.00

விளக்கவுரை: முனைவர் ர. வையாபுரி

பக்கங்கள்: 1350 (மூன்று பாகங்களும் சேர்த்து)

வெளியீடு: ஈரோடு சைவ சித்தாந்த சபை

• திருவாவடுதுறை ஆதீனத்துக் குலதெய்வமான ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகளின் முதன்மை மாணாக்கர் தாம், கவிராட்சசர் என்று போற்றப்பட்ட ஸ்ரீமத் கச்சியப்பத் தம்பிரான் சுவாமிகள். சொல் வழக்கில், இவர் கச்சியப்ப முனிவர் எனவும் அழைக்கப்படுகிறார்
• இவர் அருளிச் செய்த நுால்களில், திருவானைக்காப் புராணம், தணிகைப் புராணம், பேரூர்ப் புராணம் ஆகிய மூன்றும் முக்கியமானவை
• இவற்றில், திருவானைக்காப் புராணத்தில் வரும் ஞானஉபதேசப் படலம், தணிகைப் புராணத்தின் நந்தி உபதேசப் படலம், பேரூர்ப் புராணத்தின் காலவன் வழிபடு படலம் – ஆகிய இம்மூன்று படலங்களும், சிவஞானத் தெளிவு உபதேசத் திரயம் என, திருவாவடுதுறை ஆதீன சம்பிரதாயத்தில் போற்றப்பட்டு வருகின்றன
• இந்நுால் மொத்தம் மூன்று பாகங்களாக வெளிவந்துள்ளது. முதல் பாகம் – சுருக்கம், 2ம் பாகம் – விரிவு, 3ம் பாகம் – முத்திநிலை எனப் பிரிக்கப்பட்டுள்ளது
• முதல் பாகத்தில், திருவானைக்காப் புராணம் – ஞான உபதேசப் படலத்திற்கு உரையும் அது சார்ந்து சைவ சித்தாந்த விளக்கமும் கொடுத்துள்ளார் ஆசிரியர் வையாபுரியார்
• முதல் பாகத்திற்கு மகிழ்வுரை வழங்கிய முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி, பாரத அளவில் தத்துவப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் என அனைவரும், தமிழகத்தில் இன்றும் உயிர்ப்போடு உள்ள சைவ சித்தாந்தத் தத்துவத்தை மிக மேம்போக்காக அணுகியிருப்பதை ஆதாரங்களுடன் குறிப்பிட்டுக் கடுமையாகக் கண்டித்துள்ளார். மேலும் இலக்கணக் கொத்து சுவாமிநாத தேசிகர் மீதான குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். படித்து மகிழத் தக்க பகுதி
• இரண்டாம் பாகத்தில், தணிகைப் புராணம் – நந்தி உபதேசப் படலமும், மூன்றாம் பாகத்தில் பேரூர்ப் புராணம் – காலவன் வழிபடு படலமும் இடம் பெறுகின்றன
• வையாபுரியாரின் சைவ சித்தாந்தப் புலமையும், தெளிவும், நுட்பமும் வெளிப்படும் தலையாய நுால் இது
• கெட்டி அட்டையில் தெளிவான எழுத்துருவுடன் அமைந்த நுால்
• சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கிப் பயில வேண்டிய நுால் இது

Order on WhatsApp