பதிபசுபாசப் பனுவல் – மறைஞானதேசிகர் உரையுடன்
₹135.00
ஆசிரியர்: கண்கட்டி மறைஞானசம்பந்த நாயனார்
காண்டிகை உரை: மறைஞான தேசிகர்
பக்கங்கள்: 150
வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்
- சிதம்பரம் கண்கட்டி மறைஞானசம்பந்தர், 16 ஆம் நுாற்றாண்டில் சிதம்பரத்தில் வாழ்ந்த சைவ ஞானி. இவர் சிவதருமோத்தரம், பதிபசுபாசப் பனுவல் போன்ற பல நுால்களை அருளியுள்ளார்
- இவரது சீடர் மறைஞானதேசிகர். இவர் தம் ஆசிரியர் எழுதிய நுால்களுக்கு உரை எழுதியுள்ளார்
- பதிபசுபாசப் பனுவல், பலமுறை மூலம் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. உரை கிடைக்கவில்லை என, தமிழ் இலக்கிய வரலாறு – 16 ம் நுாற்றாண்டு – 3ம் பாகத்தில், சைவப் பேரறிஞர் மு. அருணாசலம் பதிவு செய்துள்ளார்
- அவ்வுரை, சைவ உலகம் செய்த தவப் பயனால், உ. வே. சாமிநாதையர் நுால்நிலையத்தில் ஓலைச் சுவடியில் இருந்துள்ளது
- அதை 2021ம் ஆண்டு முதன் முறையாக அந்நுால்நிலையத்தால் அச்சில் ஏற்றியுள்ளனர்
- சைவப் பெருமக்கள் இந்நுாலை அவசியம் வாங்கிப் பயில வேண்டும்
- இந்நுால் அளவை குறித்து சிறப்பாகப் பேசுவதால், சைவர்களுக்கு மட்டுமின்றி தத்துவம் பயில்வோருக்கும் இந்நுால் சிறந்த பொக்கிஷம்





