நற்றமிழ் வல்ல நால்வர்
₹85.00
ஆசிரியர் : சு. சபாரத்தின குருக்கள்
பக்கங்கள்: 176
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
• திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சைவ சமயத்தின் பிரதான ஆசாரியர்கள் அல்லது ஆசிரியர்கள் என்று போற்றப்படுகின்றனர்
• இவர்களின் வாழ்க்கை, அற்புதங்கள் நிறைந்தது; சிவபரத்துவத்தை நிலைநாட்டியது; சைவ சமயத்தை தமிழகத்தில் வலுவாக காலுான்றச் செய்தது
• நால்வர் பெருமக்களின் வாழ்க்கை வரலாற்றை தேவையான அளவு விரித்தெடுத்து எழுதியுள்ளார் நுாலாசிரியர்
• ஒவ்வொரு ஆசாரியரின் வாழ்க்கை வரலாற்றின் இறுதியிலும் அவரைப் பற்றிய குறிப்புகள், அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை, தலங்களின் வரிசை ஆகியவை இடம் பெற்றுள்ளன
• நுாலின் முற்பகுதியில், 63 நாயன்மார்கள், சேக்கிழார் சுவாமிகள் வரலாறு, திருமுறைகள் பற்றிய விரிவான குறிப்புகள், பாடல் பெற்ற தலங்களின் பட்டியல் ஆகியன இடம் பெற்றுள்ளது சிறப்பு
• நால்வர் பெருமக்கள் பற்றி, மரபார்ந்த வழியில் அறிந்து கொள்ள இந்நுால் பெரும் உதவியாக இருக்கும்





