சிவஞானபோதம் – சித்தி ( உரைநுால்)
₹40.00
உரையாசிரியர்: முனைவர் ர. வையாபுரி
பக்கங்கள்: 68
வெளியீடு: ஈரோடு சைவ சித்தாந்த சபை
• மெய்கண்டார் அருளிய சிவஞானபோதத்திற்கு எழுந்த முதல் உரைநுால், அவரது மாணவர் அருணந்தி சிவாச்சாரியர் அருளிய சிவஞான சித்தியார் தான்
• செய்யுள் வடிவில் அமைந்த அந்நுால், மெய்கண்ட சாத்திரங்களில் தலையாய நுாலாக விளங்குகிறது
• சிவஞானபோதம் 12 சூத்திரங்கள் – அவற்றிற்கான பதவுரை, குறிப்புரையும், அச்சூத்திரங்களுக்கு உரிய சித்தியார் செய்யுட்கள், அவற்றிற்கான பதவுரை, குறிப்புரையும், ஒவ்வொரு சூத்திரத்தின் இறுதியில், சிவஞானபோதம், சித்தியார் செய்யுட்களுக்கான ஒப்புமை அட்டவணையும் இந்நுாலில் இடம் பெற்றுள்ளன
• சைவ சித்தாந்தம் பயிலும் ஆரம்ப நிலையில் உள்ளோருக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் இந்நுால் பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை





