திருக்கருவை அந்தாதிகள் (உரையுடன்)
₹160.00
ஆசிரியர்: வரதுங்கராம பாண்டியர்
உரையாசிரியர்கள்: இரத்நவேலன், வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர் & சே. கிருஷ்ணமாசாரியர், இராய. சொ.,
பக்கங்கள்: 154
வெளியீடு: அறுபத்துமூன்று நாயன்மார் குருபூசைக் குழு
- தென்காசிப் பாண்டியர் வம்சாவளியில், பொ.யு. 1588 – 1613 காலகட்டத்தில் இன்றைய தென்காசி மாவட்டத்தில் உள்ள கரிவலம்வந்த நல்லுாரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர் வரதுங்கராம பாண்டியர்
- இவர் பிரமோத்தர காண்டம், திருக்கருவை அந்தாதிகள் மூன்று, கொக்கோகம் ஆகிய ஐந்து நுால்களைப் பாடியவர்
- இவர் பாடிய திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதியே குட்டித் திருவாசகம் எனப் போற்றப்படுகிறது. இந்நுால் நெடுங்காலமாக சைவ மக்கள் விரும்பிப் பயிலும் சிறந்த தோத்திர நுால் என்பார் சைவப் பேரறிஞர் மு. அருணாசலம்
- திருக்கருவை அந்தாதிகள் தொகுப்பில், திருக்கருவை வெண்பா அந்தாதி, திருக்கருவைக் கலித்துறை அந்தாதி, திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி ஆகிய மூன்று நுால்கள் இடம் பெற்றுள்ளன
- இம்மூன்றுக்கும் முறையே, சங்கரன்கோவில் இரத்நவேலன், திருவல்லிக்கேணி வை. மு. கோபாலகிருஷ்ணமாசாரியர் மற்றும் சே. கிருஷ்ணமாசாரியர், தமிழ்க்கடல் ராய. சொ., ஆகியோரின் நுட்பமான உரைகள் இடம்பெற்றுள்ளன
- சைவப் பெருமக்கள் அவசியம் வாங்க வேண்டிய நுால்களில் இதுவும் ஒன்று என்பதில் ஐயமில்லை




