தனியூர்ப் புராணம் (அரும்பத உரையுடன்)
₹45.00
ஆசிரியர்: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
அரும்பத உரை: உ. வே. சாமிநாதையர்
பக்கங்கள்: 52
வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்
- மயிலாடுதுறை அருகே உள்ள கூறைநாடு. இங்குள்ள புழுகீஸ்வரர் கோயில் அமைந்துள்ள தனியூர் தான் இத்தலபுராணத்திற்குரிய திருத்தலம்
- மகாவித்துவான் பாடிய தலபுராணங்களில் மிகப் பெரியது, 2506 செய்யுட்கள் கொண்ட நாகைக்காரோணப் புராணம். மிகச் சிறியது, 202 பாடல்களைக் கொண்ட இத்தலபுராணம்
- மொத்தம் 8 படலங்களுடன் 202 பாடல்களுடன் இத்தலபுராணம் அமைந்துள்ளது
- புழுகீசப் படலத்தில், யானை முதலிய பல அஃறிணைகளும் இறைவனை வழிபட்டு உய்ந்தமை கூறப்பட்டுள்ளது
- புராணத்தின் நிறைவில், சிவாலய தரிசன விதிப் படலத்தில், சிவாலயத்தை சைவர்கள் எப்படி தரிசிக்க வேண்டும் என்பது விரிவாகக் கூறப்பட்டுள்ளது





