திருநாகைக்காரோணப் புராணம் (மூலமும் உரையும்)
₹600.00
ஆசிரியர்: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
உரையாசிரியர்: முனைவர் அ. திருநாவுக்கரசு
பக்கங்கள்: 940
வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்
- மகாவித்துவான் இயற்றிய தலபுராணங்களில் இப்புராணம் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது
- 1868 ஆம் ஆண்டு இயற்றத் தொடங்கி 1869 ஆம் ஆண்டு முடித்தார். அரங்கேற்றம் முடிவதற்குள்ளாகவே இந்நுால் அச்சிடப்பட்டு வெளியான பெருமை கொண்டது
- மொத்தம் 60 படலங்கள், 2506 பாடல்களுடன் இப்புராணம் திகழ்கிறது
- 1869 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட போது, ஒரு சில இடங்களில் குறிப்புரைகள் சேர்க்கப்பட்டன. 1970 ஆம் ஆண்டில், திருவாவடுதுறை ஆதீனப் புலவர் சித்தாந்த சைவமணி த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் குறிப்புரையுடன் வெளியானது
- இவ்விரண்டு குறிப்புகளையும் தழுவி, இந்நுாலுக்குப் பொழிப்புரை வரையப்பட்டுள்ளது
- இலக்கியச் சுவை நிரம்பிய இத்தலபுராணம், சைவப் பெருமக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்




