கந்தபுராணத்தில் சிவபரத்துவம் – தொகுதி 1
₹150.00
தொகுப்பாசிரியர்: தில்லை எஸ். கார்த்திகேய சிவம்
பக்கங்கள்: 144
வெளியீடு: கந்தபுராண ஞானஸபை
• சைவ உலகில், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், கந்தபுராணம் ஆகிய மூன்று புராணங்களும், இறைவனின் முக்கண்களாகப் போற்றப்படுபவை
• இறைவனின் நெற்றிக்கண்ணாக போற்றப்படும் கந்தபுராணத்தில், சிவபெருமானின் பரத்துவத்தை, கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகள் நுால் முழுவதுமே நிலைநாட்டியுள்ளார்
• அவ்வாறு இறைவனின் பரத்துவத்தைக் கூறும் பாடல்களைத் தொகுத்து அவற்றுக்கு உரையும் வரைந்துள்ளார் தொகுப்பாசிரியர்
• உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம் ஆகிய முதல் மூன்று காண்டங்களில் உள்ள சிவபரத்துவப் பாடல்கள் இந்த முதல் தொகுதியில் இடம் பெறுகின்றன
• சிவபெருமான் மும்மூர்த்திகளில் ஒருவனல்லன் என்ற, திருமுறைகளின் கருத்தை, இந்நுால் தொகுப்பு மீண்டும் உறுதி செய்கிறது
• சைவ அன்பர்கள், இந்நுாலை அவசியம் வாசித்து சிவபரத்துவத்தை உணர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை






