இலக்கணச் சுருக்கம்
₹95.00
ஆசிரியர்: யாழ்ப்பாணம் நல்லுார் ஆறுமுக நாவலர்
பக்கங்கள்: 216
வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை
• ஆங்கிலேயேர் ஆட்சியில், தமிழகத்திலும் ஈழத்திலும் ஆங்கில மோகம் அதிகரித்தது. அதனால் கவலையுற்ற நாவலர், தமிழ் இலக்கண, இலக்கிய நுால்களைப் பிழையின்றி அச்சிட்டு வெளியிட்டார்
• 1851 தொடங்கி 1878 வரை நன்னுால், தொல்காப்பியம் எனப் பல இலக்கண நுால்களை அச்சிட்டார்
• இவற்றில், 1873ல் இலக்கணச் சுருக்கம் வெளியானது
• பல்வேறு இலக்கண நுால்களின் விதிகளையும் திரட்டி, எழுத்து, சொல், தொடர்மொழியதிகாரம் என மூன்று தலைப்புகளில், வரிசையாக எண்ணிட்டு சுருக்கமாக அதேநேரம் தெளிவாகத் தொகுத்துள்ளார்
நாவலர்
• தமிழகத்தில் பல ஆண்டுகள் இந்நுால், கல்லுாரிகளில் பாடநுாலாக வைக்கப்பட்டிருந்த பெருமையுடையது
• தமிழ் இலக்கணத்தை நேரடியாக, சுருக்கமாகக் கற்க விரும்புவோருக்கு இந்நுால் சிறந்த வழிகாட்டி





