உண்மை விளக்கம் (தெளிவுரையுடன்)
₹15.00
உரையாசிரியர்: முனைவர் கு. சுந்தரமூர்த்தி
பக்கங்கள்: 51
வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம்
• ஸ்ரீமெய்கண்ட தேவருடைய மாணாக்கருள் ஒருவர் திருவதிகை மனவாசகங் கடந்தார். இவர் இயற்றிய ஞான நுால், உண்மை விளக்கம். இது சித்தாந்த சாத்திரங்கள் 14ல் ஒன்று
• வினாவும் விடையுமாக இயற்றப்பட்ட சித்தாந்த சாத்திரங்கள் மொத்தம் மூன்று. இருபா இருபஃது, உண்மை விளக்கம், வினாவெண்பா
• இந்நுாலாசிரியர் தம் குருவான மெய்கண்டாரிடம், சில கேள்விகள் கேட்டு, குருநாதர் சொன்னதாக அவற்றுக்கான பதில்களையும் பதிவு செய்கிறார்
• இந்நுாலில் தான், ஆடல்வல்லான் திருக்கோலத்திற்கு தத்துவார்த்த ரீதியில், ஊன நடனம், ஞான நடனம் என இரண்டு வகையான விளக்கங்கள் தரப்படுகின்றன
• அதேபோல், உயிர்கள் முத்தியின்பம் அனுபவிப்பதற்கு காரணம் மலம் தான் என்ற புகழ் பெற்ற, ‘இத்தை விளைவித்தல் மலம்’ என்ற திருவார்த்தைகள் இடம் பெற்றதும் இந்நுாலில் தான்
• சைவ சித்தாந்தம் பயில விரும்பும் அன்பர்கள் இந்நுாலை வாசித்த பிறகே, சித்தியார், சிவஞானபோதம் ஆகிய நுால்களைப் பயிலுதல் மரபு





