நந்தனார் ஏலப் பாட்டு
₹30.00
ஆசிரியர்: ஒ. சி. சோணாசல முதலியார்
பக்கங்கள்: 48
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
• கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், துடுப்பு போடும்போது தங்கள் உடல் அசதி தெரியாமல் இருக்க, ‘ஏலே ஏலேலோ’ என்ற அசைச் சொற்களை இட்டுப் பாடுவார்கள். இது ஓடப்பாட்டு என்றும் அழைக்கப்படும்
• இந்த ஏலப் பாட்டின் பாணியில், நந்தனார் எனும் திருநாளைப் போவார் நாயனாரைப் பற்றிப் பாடப்பட்ட நுால் தான் இது
• இதில் ஒரு விருத்தப்பாடல், அதையடுத்து முடுகு எனப்படும் 50 அடிகளுக்கு மேற்பட்ட பாடல் என இரண்டும் கலந்து வரும்
• அரிய நுால் பதிப்புத் திட்டத்தின் கீழ், 1900 ஆம் ஆண்டில் வெளியான இந்நுால், நகலாக மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது





