வேதாந்தம் இனிது
₹130.00
ஆசிரியர்: டாக்டர் எ. கொண்டல்ராஜ்
பக்கங்கள்: 144
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
• பாரத தத்துவ வரலாற்றில், இன்று அத்வைதம் என அறியப்படும் கேவலாத்வைத வேதாந்த மரபிற்குத் தனியிடம் உண்டு
• இம்மரபில், வடமொழியில் பல நுால்கள் உள்ளதைப் போலவே தமிழிலும் 13ஆம் நுாற்றாண்டில், பட்டனார் பகவத்கீதை தொடங்கி பல நுால்கள் எழுந்துள்ளன
• இந்த நுால்களைப் பற்றி முறையாக அறிமுகம் செய்யும் ஒரேஒரு நுால் கூட தமிழில் இதுவரை வந்ததில்லை. அந்தக் குறையை ஓரளவு இந்த நுால் போக்குகிறது
• இதில் விவேகசூடாமணி, ஒழிவில் ஒடுக்கம், அஷ்டவக்ர கீதை, தத்துவராயர் நுால்கள், குமாரதேவர் நுால்கள் ஆகியவை பற்றிய அறிமுகக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன
• அதேபோல், சதாசிவ பிரம்மேந்திரர், ஈசானிய தேசிகர், ஆவுடையக்காள், அப்பைய தீட்சிதர், நீலகண்ட தீட்சிதர், ரமணர் ஆகிய அத்வைத ஞானிகளின் வரலாறுகளும் அவர்கள் எழுதிய நுால்கள் பற்றிய அறிமுகமும் இடம் பெற்றுள்ளன
• மொத்தமுள்ள 22 கட்டுரைகளில், தமிழில் பெரிதும் அறியப்படாத வேதாந்த நுால்களைப் பற்றிய விரிவான அறிமுகம் இடம்பெறுகிறது
• தமிழ் வேதாந்தம் குறித்து தெரிந்து கொள்ள விரும்புவோருக்கு இந்நுால் சிறந்த வழிகாட்டி






