மயூரகிரி புராணம் (மூலமும் உரையும்) & குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதப் பெருமான் பிரபந்தத் திரட்டு
₹1,100.00
தொகுப்பும் பதிப்பும்: சிவதனுஷ்
பக்கங்கள்: 785
வெளியீடு: முருகவேள் பன்னிரு திருமுறை ஆய்வு மையம்
• இன்றைய சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியின் புறநகராக குன்றக்குடி திருத்தலம் அமைந்துள்ளது
• இங்கு மலை மீது முருகப் பெருமான் கோயில் உள்ளது. சைவ ஆதீனங்களில் தொன்மையான குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அமைந்துள்ளது
• இத்தலத்து இறைவன் மீது, தலபுராணம் உள்ளிட்ட பல பிரபந்தங்கள் பாடப்பட்டுள்ளன
• 1785 ஆம் ஆண்டு, மதுரை வேதாந்த சுப்பிரமணிய பிள்ளை என்பவர் பாடிய தலபுராணத்திற்கு, யாழ்ப்பாணத்து நல்லுார் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் மருகரும், வித்துவ சிரோமணியுமாகிய பொன்னம்பலபிள்ளை, ஒரு பொழிப்புரை எழுதி, 1885 ஆம் ஆண்டு வெளியிட்டார்
• யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரி தமிழ்ப் பேராசிரியரும், இந்துசாதனம் இதழின் ஆசிரியருமாக இருந்த ம. வே. திருஞானசம்பந்தப் பிள்ளை, அந்தப் பொழிப்புரையோடு, விசேட உரை எழுதி, பொன்னம்பல பிள்ளை வரலாற்றோடு 1937 ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். அந்நுாலே தற்போது மீண்டும் அச்சாகியுள்ளது
• தலபுராணத்தைத் தொடர்ந்து குன்றக்குடி மீதான பல்வேறு பிரபந்தங்கள், குன்றக்குடி ஆதீனப் புலவராக விளங்கிய கதிரேசன் அவர்களின் உரைகளோடு இந்நுாலில் இடம் பெற்றுள்ளன. நுால்களைப் பற்றிய ஆய்வுரைகளும் கொடுக்கப்பட்டுள்ளன







