பாலபாடம் (இரண்டாம் புத்தகம்)
₹23.00
ஆசிரியர்: யாழ்ப்பாணம் நல்லுார் ஆறுமுக நாவலர்
பக்கங்கள்: 56
வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை
• ஆறுமுக நாவலர், சைவ சமயப் பிரசாரத்திற்காக, பள்ளிக்கூடங்களை நடத்தத் தொடங்கினார்
• மாணவர்களுக்கான அடிப்படைப் பாடத்திட்டங்களாக, பாலபாடம் என்ற தலைப்பில், நான்கு பாகங்களை வெளியிட்டார்
• இரண்டாம் புத்தகத்தில், நீதிவாக்கியங்கள், ஒன்றிரண்டு பத்திகளில் நம் நாட்டில் அப்போது வழங்கி வந்த நீதிநெறிகள் போதிக்கும் சிறு கதைகள், பூமி, மிருகம், தேசங்கள் எனப் பல்வேறு தலைப்புகளில் ஒன்றிரண்டு பத்திகளில் அறிமுகம், பெற்றோர் முதலிய பெரியோரை வழிபடல், தினசரி காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் எழுவதில் இருந்து, இரவில் படுக்கப் போகும் வரை, ஒரு மாணவன் செய்ய வேண்டிய தினசரி கடமைகள் பற்றிய அறிமுகம், தந்தை, ஆசிரியர் முதலிய பெரியவர்களுக்கு கடிதம் எப்படி எழுத வேண்டும் என்பதற்கான பயிற்சி ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன






