திருக்கைலாய ஞான உலா (மூலமும் உரையும்)
₹30.00
உரையாசிரியர்: புலவர் அடியன் மணிவாசகன்
பக்கங்கள்: 72
வெளியீடு: சங்கர் பதிப்பகம்
- தமிழ் இலக்கியங்களில், உலா தொடர்பாக முதலில் தோன்றியது திருக்கைலாய ஞான உலா. அதனால் இது ஆதி உலா எனப் போற்றப்படுகிறது
- சுந்தரமூர்த்தி நாயனாருடன் கயிலாயம் சென்ற சேரமான் பெருமாள், முக்கண் மூர்த்தி திருமுன்பே இதை விண்ணப்பித்தது இதற்குத் தனிச் சிறப்பைத் தந்துள்ளது
- கயிலையில் உடனிருந்து கேட்ட மாசாத்தனார், இதை தமிழகத்தில் திருப்பிடவூரில் வெளிப்படுத்தினார் எனப் பெரியபுராணம் கூறும்
- மொத்தம் 394 நேரிசை வெண்பா அடிகளால் ஆன இந்நுால், சைவ சித்தாந்தத் தத்துவத்தைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது
- பன்னிரு திருமுறைகளில் பதினோராம் திருமுறையான பிரபந்தத் திரட்டில் இந்த ஞான நுால் இடம் பெற்றுள்ளது
- சைவப் பெருமக்கள், இந்நுாலை உரையோடு பயின்று உளத்தில் இருத்த வேண்டும்




