சைவ சந்நியாச பத்ததி (தமிழ் மொழிபெயர்ப்பு)
₹400.00
மொழிபெயர்ப்பு: செ. முருகவேள்
பக்கங்கள்: 184
வெளியீடு: புனிதர் பேரவை & இலங்கை சைவநெறிக் கழகம்
• பொ.யு. 16 ஆம் நுாற்றாண்டில், தமிழகத்தில் வேளாளர்கள் துறவு மரபினைக் கைக்கொள்ள, பிராமணர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்
• அப்போது சூரியனார்கோயில் குருமகா சந்நிதானமாக எழுந்தருளியிருந்த ஸ்ரீ வீழி சிவாக்கிர யோகிகள், சைவ ஆகமங்கள், நான்கு வர்ணத்தாருக்கும் துறவு மரபினை அனுமதிக்கிறது என ஆதாரங்களைக் காட்டி, சைவ சந்நியாச பத்ததி என்ற இந்நுாலினை அருளினார்
• இந்நுாலில் மொத்தம் எட்டுப் படலங்கள் உள்ளன. முதல் படலத்தில் தினசரி செய்யும் சந்தியாவந்தனம் முதலிய விதிகள் கூறப்படுகின்றன. 2ம் படலத்தில் சிவபூஜையும், 3ம் படலத்தில் திருவைந்தெழுத்தை கணிக்கும் முறையும், 4ம் படலத்தில் துறவி பிச்சை ஏற்கும் முறையும், 5ம் படலத்தில் சாதுர்மாஸ்ய விரதமும், 6ம் படலத்தில் தீட்சை விதிகளும், மோ் படலத்தில் துறவு வகைகளும், 8 ம் படலத்தில் துறவிகளுக்கான இறுதிச் சடங்குகளும் விளக்கப்பட்டுள்ளன
• சைவ சித்தாந்தம் பயில்வோரும், சைவ அன்பர்களும், மற்ற அன்பர்களும் அவசியம் வாங்கிப் பயில வேண்டிய நுால் இது
• சைவப் பெருமக்களின் வீடுகளில் கட்டாயம் இருக்க வேண்டிய நுால் இது










