
வேதாந்த மதவிசாரம்
₹150.00
வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
ஆசிரியர் (Author): நாகப்பட்டினம் வேதாசலம் பிள்ளை எனும் மறைமலையடிகள்
பக்கங்கள் (Pages): 158
வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
பத்தொன்பதாம் நுாற்றாண்டில், சைவ சித்தாந்தத்தை அவைதிகம் என சங்கர அத்வைதிகளும், ராமானுஜ வைணவர்களும் அவதுாறு செய்து வந்தனர்
இதுதொடர்பாக, சமூகத்தில் பல துண்டுப் பிரசுரங்கள் மற்றும் நுால்கள் மூலம் கருத்துப் போர் நடந்தது. இதில், சூளை சோமசுந்தர நாயகர் பிரதான இடம் வகித்தார்
அப்போது அவரது மாணவரான வேதாசலம் பிள்ளை (அப்போது அவர் மறைமலையடிகள் ஆகவில்லை), சங்கர அத்வைதிகளைக் கண்டித்து எழுதிய நுால்தான் இது
சைவ சமயம், வேதாகமங்களையும், உபநிடதங்களையும் ஏற்றுக் கொண்டதால் அது வைதிக மதமே என இந்நுாலில் பலவாறாக நிறுவியுள்ளார் மறைமலையடிகள்
சைவ சித்தாந்திகள் இந்நுாலை எழுத்தெண்ணிப் பயின்று பயன்கொள்ள வேண்டும்

