வடதிருமுல்லைவாயிலந்தாதி மூலமும் உரையும்
₹60.00
ஆசிரியர்: ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள்
பதவுரை: மதுரை இ. இராமசுவாமிப் பிள்ளை என்ற ஞானசம்பந்தப் பிள்ளை
விளக்கம்: த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ஆதீனப் புலவர்
பக்கங்கள்: 112
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• தற்போதைய திருவள்ளூர் மாவட்டத்தின் ஆவடி வட்டத்தில் அமைந்துள்ளது வடதிருமுல்லைவாயில் திருத்தலம்
• சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்
• இங்கு உறையும் மாசிலாமணி ஈசுவரர் மீது, ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள், 100 பாடல்கள் கொண்ட அந்தாதியைப் பாடியருளினார்
• இப்பாடல்கள் திரிபந்தாதியாக அமைந்துள்ளன
• துறைசை ஆதீனம் 16ம் பட்டம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் சித்தாந்த பாடங்கள் பயின்ற மதுரை இ. இராமசுவாமிப் பிள்ளை என்ற ஞானசம்பந்தப் பிள்ளை, இந்நுாலுக்குப் பதவுரை செய்தார். அது 1889 ஆம் ஆண்டு அச்சானது
• அப்பதவுரை, நீண்ட தொடர்களுக்கான உரையாக இருந்ததால் அதை தேவையான சீர்களாகப் பிரித்தும் விளக்கம் எழுதியும் உபகரித்துள்ளார் ஆதீனப் புலவர் த. ச. மீ., அவர்கள்


