0

நால்வர் நான்மணிமாலை விருத்தியுரை

₹27.00

உரையாசிரியர்: கொ. இராமலிங்கத் தம்பிரான்

பக்கங்கள்: 138

வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்

  • தமிழில் சைவ இலக்கியங்களைப் பாடியதில் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளுக்குத் தனியிடம் உண்டு. கற்பனைக் களஞ்சியம் எனப் போற்றப்படுபவர்
  • இவர், நால்வர் மீது, நான்மணி மாலை பாடியுள்ளார். இதில் மொத்தம் 40 செய்யுட்கள் உள்ளன.
  • திருஞானசம்பந்தருக்கு வெண்பா, திருநாவுக்கரசருக்கு கட்டளைக் கலித்துறை, சுந்தரருக்கு விருத்தம், மணிவாசகருக்கு அகவல் என்ற முறைப்படி, இந்நுால் அமைந்துள்ளது
  • இந்நுாலுக்குத் திட்பமும் நுட்பமும் செறிந்த உரையினை, சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகள் எழுதி, 1896 ஆம் ஆண்டு முதன்முறையாக வெளியிட்டார்
  • சுவாமிகள் உரையையும், யாழ்ப்பாணத்து வண்ணைநகர் ஸ்ரீமத் சுவாமிநாத பண்டிதரின் குறிப்புரையையும் தழுவி, இராமலிங்க சுவாமிகளின் மாணவர் திருவேங்கட நாயுடுவிடம் கேட்ட பாடத்தையும் அடிப்படையாக வைத்து கொ. இராமலிங்கத் தம்பிரான், 1921 ஆம் ஆண்டு இவ்வுரையை எழுதி முதல் பதிப்பாக வெளியிட்டார்
  • ஒவ்வொரு பாடலுக்கும் பதவுரை, விளக்கவுரை என இவ்வுரை அமைந்துள்ளது
  • பாடல்களில் இடம் பெற்றுள்ள சரித்திரங்களைத் தனியாக விரித்துரைத்துள்ளார் உரையாசிரியர்
  • செறிவான இவ்வுரை அவசியம் வாசிக்கத் தக்கது
Order on WhatsApp