0

தொல்காப்பியச் சூத்திர விருத்தி (விளக்கக் குறிப்புகளுடன்)

₹80.00

ஆசிரியர்: ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள்

குறிப்புரை: ஆதீன மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர்

பக்கங்கள்: 190

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

  • தொல்காப்பிய பாயிரம் மற்றும் முதல் சூத்திரத்திற்கான ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகளின் உரைகள் அடங்கியதே இந்நுால்
  • சுவாமிகளின் விளக்க உரையில், முக்கிய இடங்களுக்கான விளக்கக் குறிப்புகளை ஆதீன மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர் விரிவாக எழுதியுள்ளார்
  • தொல்காப்பிய நுாற்பாக்களின் சிக்கல்களுக்கான தீர்வுகள் இதன்கண் உள்ளன
  • தமிழுக்கான இலக்கணமும் வடமொழிக்கான இலக்கணமும் ஒன்றே என்று புலவர்கள் சாதித்துக் கொண்டிருந்த காலத்தில் அவை வேறு வேறு என்று இந்நுால் மூலம் ஆணித்தரமாக நிலைநாட்டியுள்ளார் சுவாமிகள்
  • இந்நுாலில் தான், சிறுபொழுதின் வகைகள் ஐந்து, ஆகுபெயருக்கும் அன்மொழித் தொகைக்குமான வேறுபாடு ஆகியவற்றை சுவாமிகள் விளக்கியுள்ளார். இவை, 20 ஆம் நுாற்றாண்டில் தமிழ் அறிஞர்கள் மத்தியில் பேசுபொருளாகின என்பது இங்கே நினைவுகூரத் தக்கது
  • சுவாமிகளின் விளக்கங்களைப் பிற்காலத்தோர் விளக்கங்களோடு ஒப்பிட்டும், வடமொழிச் சொற்களுக்குத் தெளிவான தமிழ்ப் பொருள் தந்தும் விளக்கக் குறிப்புகளை மகாவித்துவான் தேசிகர் எழுதியுள்ளார்
  • நுாலின் பிற்பகுதியில் தேசிகரின் விளக்கக் குறிப்புகள் தனியாக இடம் பெற்றுள்ளன
  • தமிழ் இலக்கணம், சைவ சித்தாந்தம் பயில்வோர் அவசியம் பயின்று உணர வேண்டிய நுால் இது
Order on WhatsApp