தேர் பவனிப் பெருமை (ரதோத்ஸவ மஹிமா)
₹300.00
ஆசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்
பக்கங்கள்: 176
வெளியீடு: சிவாசார்யர் அறக்கட்டளை & சிவஸ்ரீ ஸாம்பமூர்த்தி சிவாசார்யர் டிரஸ்ட்
• திருக்கோயில் திருவிழாக்களில் தேரோட்டம் எனப்படும் தேர்த் திருவிழாவிற்கு முக்கிய இடம் உண்டு. அவ்விழாவை எப்படி நடத்துவது என்பதோடு அதன் தத்துவக் கூறுகளையும் விளக்குவதுதான் இந்நுால்
• இதில், பத்து நாள் திருவிழாவின் தத்துவம், உற்சவம் என்ற சொல்லின் விளக்கம், உற்சவங்களில் இறைவனின் ஐந்தொழில் தத்துவம், சங்க நுால்களில் திருவிழாக்கள், கோயில்களின் விழாக்கள் ஆகியவை முதற்கட்டமாக விளக்கப்படுகின்றன
• அடுத்த பகுதியில், தேரின் அமைப்பும் உருவ இலக்கணமும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன
• தேவையான இடங்களில் தேருக்குரிய பல்வேறு படங்கள் இடம் பெற்றுள்ளன
• தேரை பிரதிஷ்டை செய்வதற்கான சடங்குகள், பழுது நீக்கும் முறை ஆகியவை விளக்கப்பட்டுள்ளன
• தேர் தரிசனத்தின் பயன், ஒவ்வொரு தேவதைக்குமான தேர் வடிவங்கள் ஆகியவை நுாலின் இறுதியில் இடம் பெற்றுள்ளன












