திருவிளையாடல் புராணம்
₹350.00
ஆசிரியர்: ஜெயந்தி நாகராஜன்
பக்கங்கள்: 296
வெளியீடு: சுவாசம் பதிப்பகம்
• சிவபெருமானின் மூன்று கண்களில் வலக்கண் பெரியபுராணம், இடக்கண் திருவிளையாடல் புராணம், நெற்றிக்கண் கந்தபுராணம் என்று சைவ சமயம் போற்றுகிறது
• இவற்றில், இடக்கண்ணான திருவிளையாடல் புராணம் தான், தலபுராணங்களில் மூத்த புராணம்
• தேவாரப் பாக்களில் பதிவு செய்யப்பட்ட செய்திகள் தொடங்கி, 13 ஆம் நுாற்றாண்டு வரையிலான செய்திகளைத் தொகுத்து மொத்தம் 64 கதைகளுடன் இந்தத் தலபுராணம் உருவாக்கப்பட்டது
• வேம்பத்துாரார் எனப்படும் பெரும்பற்றப் புலியூர் நம்பி இயற்றிய திருவிளையாடல் புராணம், அனதாரியப்பர் இயற்றிய சுந்தர பாண்டியம், வீமநாத பண்டிதர் இயற்றிய கடம்பவன புராணம், பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணம் ஆகியவை தமிழிலும், ஹாலாஸ்ய மகாத்மியம் என வடமொழியிலும் மதுரைக்குத் தலபுராணங்கள் உண்டு
• இவற்றில் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணமே இன்று வரை அதிகளவில் வாசிக்கப்படுகிறது
• இந்தப் புராணத்தை எளிய, இனிய நடையில் தந்துள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு படலத்திற்கும் படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன
• திருவிளையாடல் புராணத்தை அறிமுகம் செய்து கொள்ள உதவியாக இருக்கும் நுால் இது





