0

தாயுமான சுவாமிகள் பாடல்கள் (மூலமும் உரையும்)

₹390.00

உரையாசிரியர்: மா. வடிவேலு முதலியார்

பக்கங்கள்: 624

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

  • மாங்காடு வடிவேலு முதலியார், 19, 20 ஆம் நுாற்றாண்டுகளில் வாழ்ந்த மிகச் சிறந்த தமிழறிஞர்; சித்த, ஆயுர்வேத வைத்தியர்; சைவ சித்தாந்தி
  • சூளை வித்வான் கு. அப்பன் செட்டியாரின் மாணாக்கராக சிறந்து விளங்கியவர்
  • இவர் பல பிரபந்தங்களுக்கு உரை வரைந்துள்ளார்; தாமே பல பாடல்களும் பாடியுள்ளார்
  • 1900 ஆம் ஆண்டில் இவரால் உரை எழுதி, இட்டா பார்த்தசாரதி நாயுடுவால் தாயுமான சுவாமிகள் பாடல்கள் வெளியிடப்பட்டன
  • தாயுமான சுவாமிகள் பாடல்களுக்கு எழுதப்பட்ட சிறந்த உரைகளில் இவரது உரையும் ஒன்று
  • குறிப்பாக, 'தேன்முகம் பிலிற்றும்' பாடல் தொகுப்பில், 168, 169 ஆவது பாடல்கள், சங்கார கர்த்தாவில் இலக்கணத்தைச் சொல்கின்றன. அப்பாடல்களுக்கு விளக்கமாக, சிவஞானபோதம் முதற்சூத்திரத்திற்கான ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகளின் சிற்றுரையை அப்படியே தந்துள்ளார்
  • அதேபோல், 'ஆசையெனும்' பாடல் தொகுப்பில், 332 ஆவது பாடலில், 'சேது மேவிய ராமநாயகனைச் சிந்தைசெய் மடநெஞ்சே' என்ற அடிகளுக்கு, சேதுபுராணத்தின் இராமன் அருச்சனைச் சருக்கத்தின் 75 ஆவது பாடல் தொடங்கி, 107 ஆவது பாடல் வரை அப்படியே மேற்கோள் காட்டி, 'இராமன் சிவபூசை செய்யவில்லையெனப் பலர் சொல்லுகின்றமையின் அப்புராணத்தினின்றுஞ் செய்யுட்களாகவே எடுத்துக் காட்டப்பட்டது' என்று சுட்டி எழுதியுள்ளார்
  • சைவ சித்தாந்திகள் அவசியம் தம் வீட்டு நுாலகத்தில் வைத்திருக்க வேண்டிய பொக்கிஷம் இந்நுால்
Order on WhatsApp