தஞ்சைப் பெருவுடையார் உலா (மூலமும் உரையும்)
₹60.00
ஆசிரியர்: கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
உரையாசிரியர்: முனைவர் குமரிச்செழியன்
பக்கங்கள்: 104
வெளியீடு: சாரதா பதிப்பகம்
- பத்தொன்பதாம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்திருந்த கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய பிரபந்தங்களுள் இந்நுாலும் ஒன்று
- இரண்டாம் சரபோஜி மன்னரின் (1777 – 1832) காலத்தில் அவரது அவைப் புலவராக வீற்றிருந்தவர்
- இந்நுால் பெரும்பாலும் அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் திருவாரூர் உலாவைப் பின்பற்றி அமைந்தது என்பார் தமிழ்த் தாத்தா உ. வே. சா.,
- இந்நுாலில், தஞ்சைப் பெரிய கோயில் மகுடாகம முறைப்படி அமைந்தது, ஒரு கிழவி தந்த கல்லை விமானத்தின் உச்சியில் சிகரமாக அமைத்தது ஆகிய செய்திகள் இடம் பெற்றுள்ளன
- இச்செய்திகள், பிரகதீசுவரர் மாகாத்மியம் என்ற வடமொழி நுாலிலும் இருப்பதால், அந்நுாலைப் பின்பற்றியே இந்நுாலும் எழுதப்பட்டது என்பார் உ. வே. சா.,
- இந்நுாலின் உரையில், 48 ஆவது கண்ணியில், தானிகர் என்ற சொல்லுக்கு, வயலில் உணவு உற்பத்தி செய்வோர் எனப் பிழையாக உரை எழுதப்பட்டுள்ளது. இந்தத் தானிகர் என்போர், திருக்கோயிலின் அர்ச்சகர்களான ஸ்தானீகர்கள்
- தமிழ்ச் சுவை அறிய விரும்புவோரும், சைவ இலக்கியம் கற்க விரும்புவோரும் அவசியம் வாசிக்க வேண்டிய அருமை நுால் இது




