0

வாதுள சுத்தாக்ய தந்திரம் (சங்கதமும் – தமிழும்)

450.00

மொழிபெயர்ப்பு: செ. முருகவேள்

பக்கங்கள்: 222

வெளியீடு: புனிதர் பேரவை & இலங்கை சைவநெறிக் கழகம்

• சைவ ஆகமங்கள் காமிகாதி வாதுளாந்தம் 28 என சொல்லப்படும். இவற்றில் இறுதியாக நிற்பது வாதுள ஆகமம்
• வாதுளத்தின் உப ஆகமங்களில் ஒன்று வாதுள சுத்தாக்யம்
• இறைவன், சுத்த அத்வாவில் மேற்கொள்ளும் வடிவங்கள், அவற்றிற்கான மந்திரங்கள் குறித்துப் பேசுவதால் இத்தந்திரம், வாதுள சுத்தாக்யம் எனப்பட்டது
• இந்த ஆகமம், கர்நாடகாவில், பொயு 12 ஆம் நுாற்றாண்டில் வீரசைவரிடம் புழகத்தில் இருந்துள்ளது. அக்கமாதேவியாரின் வசனங்களில் இந்த ஆகமம் குறிப்பிடப்பட்டுள்ளது. கன்னட மொழியில் உரைகளும் எழுதப்பட்டுள்ளன
• தமிழில், வீழிச் சிவாக்கிர யோகிகள், மறைஞானதேசிகர், ஞானப்பிரகாசர், வெள்ளியம்பலவாண முனிவர் ஆகியோர் இந்த ஆகமத்தைத் தம் நுால்களில் மேற்கோள்களாகக் காட்டியுள்ளனர்
• சீகாழி சட்டைநாத வள்ளல் இயற்றிய சதாசிவ ரூபம் என்ற சித்தாந்த சாத்திரத்திற்கு இவ்வாகமத்தின் முதல் படலமே ஆதாரம். வாலையானந்த சுவாமிகள், இவ்வாகமத்தை அடிப்படையாகக் கொண்டே சித்தாந்தப் படம் வெளியிட்டார்.
• மூல சுலோகங்கள் சம்ஸ்கிருதத்திலும், அவற்றுக்குத் தமிழில் பொழிப்புரையும் தேவையான இடங்களில் குறிப்புரையும் கொடுக்கப்பட்டுள்ளன
• இவ்வாகமத்தின் அருமைகளை விளக்கியும், பதிப்பு வரலாற்றை வெளிப்படுத்தியும் பின்னுரையில் உரையாசிரியர் பல செய்திகளைச் சொல்லியிருக்கிறார்
• சைவ ஆகமம் கற்போருக்கும் ஆய்வாளருக்கும் இந்நுால் பயன்படும்

Order on WhatsApp