பெரியபுராணம் என்ற திருத்தொண்டர் புராணம் சூசனம்
₹60.00
ஆசிரியர்: யாழ்ப்பாணம் நல்லுார் ஆறுமுக நாவலர்
பக்கங்கள்: 160
வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை
• 1852ல் பெரியபுராண உரைநடையை வெளியிட்ட ஆறுமுக நாவலர், அப்போதே இந்த சூசனத்தையும் எழுதத் தொடங்கினார்
• சூசனம் என்ற சொல்லுக்கு குறிப்பித்தல், சுட்டிக்காட்டல் என்று பொருள்
• நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை, நம்மவர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நிறைய முரண்பாடுகள் தோன்றும்
• அம்முரண்பாடுகளைக் களையும் விதமாக, அவர்களின் வாழ்வின் மையப் பொருளை சுட்டிக் காட்டுவதே இந்நுாலின் நோக்கம்
• மிக எளிய நடையில், பெரியபுராணத்திற்கு விரோதமின்றி, நாயன்மார்களின் வாழ்க்கைக் கருப்பொருளை அருமையாக விளக்கியுள்ளார் நாவலர்
• கெடுவாய்ப்பாக, காரைக்கால் அம்மையார் புராணம் வரையில் தான் அவர் சூசனம் செய்தார்
• சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கி தம் வீட்டு நுாலகத்தில் வைத்து வாசித்து உணர வேண்டிய நுால் இது








