சைவ வினா விடை – இரண்டாம் புத்தகம் (தோத்திரத் திரட்டும் கொண்டது)
₹30.00
ஆசிரியர்: யாழ்ப்பாணம் நல்லுார் ஆறுமுக நாவலர்
பக்கங்கள்: 118
வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை
• சைவ வினாவிடை என்றாலே ஆறுமுக நாவலர் தான் என்ற அளவிற்கு இந்நுால் சைவ உலகில் மட்டுமின்றி, இந்துமத உலகிலும் மிகப் பிரபலம்
• இந்நுால் தோன்றிய பின்னரே, வைணவர்கள் உள்ளிட்ட மற்ற மதத்தவர்களும் இதே பாணியில் நுால்களை எழுதத் தலைப்பட்டனர்
• 1848 ஆம் ஆண்டு இதன் முதல் பதிப்பு வெளிவந்தது. இன்று பலராலும் பலமுறை இந்நுால் வெளியிடப்பட்டுள்ளது
• சைவ சமயம் பற்றிய தகவல்களை வினா விடையாகத் தொகுத்து வழங்கினார் நாவலர்
• இரண்டாம் புத்தகத்தில், பதியியல் தொடங்கி, அன்பியல் வரை மொத்தம், 16 தலைப்புகளில் கேள்வி பதில்கள் தொகுக்கப்பட்டுள்ளன
• இந்நுால் முழுவதுமே, சைவ சமயம் பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் பதிலளிப்பதாக அமைந்துள்ளது
• நுாலின் இறுதியில் திருமுறைகளில் இருந்து பாடல்கள் தொகுக்கப்பட்ட தோத்திரத் திரட்டும், பல்வேறு தலபுராணங்களில் இருந்து தொகுக்கப்பட்ட விநாயகர் மீதான தோத்திரத் திரட்டும் அதைத் தொடர்ந்து அருஞ்சொற்களுக்கான பொருளும் இடம் பெற்றுள்ளன
• சைவ சமயத்தவர்கள், இந்நுாலை அவசியம் வாங்கி வாசிப்பதோடு தம் வீட்டு நுாலகத்திலும் வைத்துக் கொள்ள வேண்டும்






