திருக்குறள் – உரை விளக்கம்
₹480.00
உரையாசிரியர்: திருக்குறள்வேள் ஜி. வரதராஜன்
பக்கங்கள்: 576
வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்
- திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகளிடமும், தமிழ்த்தாத்தா உ. வே. சா.,விடமும் பாடம் கேட்டவர் புலவர் அ. நடேச முதலியார்
- அவரிடம் திருக்குறள் பாடம் கேட்டார் வரதராஜன். பாடம் கேட்டதோடு அமையாமல் தன் உள்ளத்துத் தோன்றிய நுண்பொருளையும் சேர்த்து இவ்வுரை எழுதி, முதலியாரிடம் கொடுத்து செப்பனிட்டு 1954 ஆம் ஆண்டில் முதன்முறையாக வெளியிட்டார்
- இவ்வுரை நுால் இன்றளவும் இதன் எளிய நடைக்கும், தெளிவான உரைக்கும் போற்றப்படுகிறது
- நுாலின் தொடக்கத்தில், திருக்குறள், பெயர்க்காரணம், அதிகார அமைப்பு, ஆசிரியர் வரலாறு, ஆசிரியர் சமயம், உரை ஆகியவை பற்றி விரிவாக விளக்கி புலவர் அ. நடேச முதலியார் எழுதிய முகவுரை இடம்பெற்றுள்ளது
- ஒவ்வொரு குறளுக்கும் பொழிப்புரை, அதையடுத்து விளக்கம் ஆகியவை இடம்பெற்றுள்ளன
- திருக்குறளைப் பயில விரும்புவோருக்கு இந்நுால் ஒரு சிறந்த கையேடு என்பதில் ஐயமில்லை




